டீமில் இடமில்லாட்டி என்னா? ஒதுக்கி வைத்த இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் ராகுல்!

இந்திய அணி வீரர் கே எல் ராகுல், டி20 அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டார். அவரை டி20 அணியில் தேர்வுக் குழு தெரிவு செய்யவில்லை.

டீமில் இடமில்லாட்டி என்னா? ஒதுக்கி வைத்த இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் ராகுல்!

இந்திய அணி வீரர் கே எல் ராகுல், டி20 அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டார். அவரை டி20 அணியில் தேர்வுக் குழு தெரிவு செய்யவில்லை.

ஐபிஎல் தொடர் முடிந்த உடன்  டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியில் எப்படியாவது இடம் பெற முடிவு செய்துள்ளாராம் ராகுல். 

ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்தால் எப்படியும் டி20 இந்திய அணியில் தேர்வு செய்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதே ராகுல் போட்டுள்ள திட்டம்.

இந்திய டி20 அணியில் துவக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா உறுதியாகி விட்ட நிலையில், மாற்று வீரர்களாக சுப்மன் கில், ருதுருராஜ் கெய்க்வாட் இருக்கின்றனர்.

மூன்றாம் வரிசையில் விராட் கோலி ஆடுவார். ஒருவேளை கோலி தேர்வு செய்யப்படவில்லை என்றாலும் கூட திலக் வர்மா, சுப்மன் கில் இடையே போட்டி நிலவும்.

நான்காம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், ஐந்தாம் மற்றும் ஆறாம் வரிசையில் பேட்டிங் செய்ய ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ஜிதேஷ் சர்மா, இஷான் கிஷன் ஆகியோரிடையே போட்டி நிலவுகின்றது.

இந்த நிலையில் மாற்று வீரராக மட்டுமே கே எல் ராகுலால் டி20 அணியில் இடம் பெற முடியும் என்பதுடன், எந்த வீரருக்காவது காயம் ஏற்பட்டால் அணியில் வாய்ப்பு பெற முடியும். 

இந்திய ஒருநாள் அணியில் நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய முடியும் என்பதை நிரூபித்த ராகுல் இப்போது டி20 அணியிலும் அதே உத்தியை கடை பிடிக்க தீர்மானித்து உள்ளார்.

இதுவரை ஐபிஎல் தொடரில் நான்காம் வரிசையில் களமிறங்கி 11 போட்டிகளில் 324 ரன்கள் குவித்துள்ள கே எல் ராகுலின் சராசரி 46.29 என்பதுடன், ஸ்ட்ரைக் ரேட் 130 ஆகும். 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...