பிசிசிஐயால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆப்பு.. சூர்யகுமார் யாதவ் தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்

சூர்யகுமார் யாதவ் 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

பிசிசிஐயால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆப்பு.. சூர்யகுமார் யாதவ் தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்

சூர்யகுமார் யாதவ் 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரின் கடைசிப் போட்டியில் சூர்யகுமார் யாதவுக்கு கணுக்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. 

தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை எடுத்து மீண்டு வந்த  அவருக்கு குடலிறக்கம் இருப்பது கண்டறியப்பட்டு அதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சூர்யகுமார் யாதவ் தற்போது மீண்டும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்ற நிலையில், அங்கே அவர் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு பயிற்சி செய்து உடற் திறனை மேம்படுத்த வேண்டும் என கூறப்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாக அவர் 2024 ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைய முடியாத நிலை ஏற்பட்டுள்ள உள்ளது.

இதேவேளை, 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கு சூர்யகுமார் யாதவ் மிகவும் முக்கியமான வீரர் என்பதால் பிசிசிஐ அவரை அவசர அவசரமாக ஐபிஎல் தொடரில் ஆட வைக்க விரும்பவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் மேலும் சில வாரங்கள் கழித்து தாமதமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இணையவும் வாய்ப்பு உள்ளது. 

இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுவதுடன், சூர்யகுமார் யாதவ் பழைய ஃபார்மில் அதிரடி ஆட்டம் ஆடுவாரா என்ற கேள்வியுள்ள எழுந்து உள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...