இளம் வீரரின் அதிரடி குற்றச்சாட்டு.. மாற்றத்தை ஏற்படுத்த பிசிசிஐ முடிவு... வருகிறது புதிய குழு!

ரஞ்சி சீசனில் இறுதிப்போட்டியில் விதர்பா அணிக்கு எதிராக விளையாடி மும்பை அணி 42வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. 

இளம் வீரரின் அதிரடி குற்றச்சாட்டு.. மாற்றத்தை ஏற்படுத்த பிசிசிஐ முடிவு... வருகிறது புதிய குழு!

ரஞ்சி சீசனில் இறுதிப்போட்டியில் விதர்பா அணிக்கு எதிராக விளையாடி மும்பை அணி 42வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. 

இதனையடுத்து, உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் உடனடியாக ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், மும்பை அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கிலும் சர்துல் தாக்கூர் மிகப்பெரிய பங்களிப்பை செய்தார். 

அத்துடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவர் உள்ளமை சிறந்த எதிர்காலத்தை அவருக்கு வழங்கும் என கூறப்படுகின்றது.

ஐபிஎல்இல் டிஆர்எஸ் நீக்கம்.. ரிவ்யூ கேட்டால் நடப்பது இதுதான்... பிசிசிஐ அதிரடி.. 

இந்த நிலையில் ரஞ்சி டிராபி இறுதிப் போட்டி முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய சர்துல் தாக்கூர், ரஞ்சி தொடரில் ஒரு போட்டிக்கு மற்றொரு போட்டிக்கும் இடையே நாட்கள் வெகு குறைவாக இருக்கிறது என்று கூறினார்.

அத்துடன், முன்பு போட்டிகளுக்கு இடையே நாட்கள் மிக அதிகமாக இருந்தது. மேலும் இறுதிப் போட்டி வரை வரக்கூடிய அணி 10 போட்டிகளில் விளையாட வேண்டும். இப்படி குறைந்த இடைவெளியில் விளையாடினால் அடுத்த இரண்டு வருடங்களில் நிறைய இந்திய வீரர்கள் காயம் அடைந்திருப்பார்கள். பிசிசிஐ இதைப்பற்றி யோசிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதனையடுத்து,  இந்த விஷயத்தில் வீரர்களிடம் கேட்டுதான் முடிவு எடுக்க வேண்டும் என்று ராகுல் டிராவிட் கூறியிருந்தார்.

தற்போது இந்த விஷயத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. எனவே ரஞ்சி டிராபியை எப்படி நடத்தலாம் என தீவிரமாக பிசிசிஐ யோசிக்கிறது.

இந்த இரண்டு விஷயங்களுக்கும் தீர்வு காணும் விதமாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் விவிஎஸ் லட்சுமணன், இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், இந்திய கிரிக்கெட் புது மேலாளர் அபே குருவில்லா ஆகிய நால்வர் கொண்ட குழுவை நியமித்திருக்கிறது. 

இவர்கள் இது குறித்து ஆலோசித்து தங்களுடைய இறுதி கருத்தை பிசிசிஐ இடம் தெரிவிப்பார்கள். அதன் பின்னர் இதற்கு தீர்வு காணப்படும்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...