நான் போறப்ப இது நிச்சயம் நடக்கும்.. ரசிகர்களுக்கு சத்தியம் பண்றேன்.. கம்பீர் அதிரடி!

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு அடுத்து வெற்றிகரமான அணியாக உள்ளது.

நான் போறப்ப இது நிச்சயம் நடக்கும்.. ரசிகர்களுக்கு சத்தியம் பண்றேன்.. கம்பீர் அதிரடி!

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு அடுத்து வெற்றிகரமான அணியாக உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கவுதம் கம்பீர் கேப்டனாக இருந்த காலகட்டத்தில் 2012 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராகவும், 2014ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராகவும் வெற்றி பெற்று இரண்டு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது.

கவுதம் கம்பீர் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை விட்டு வெளியேறிய பிறகு, அந்த அணி மிகவும் சுமாராக மாறியது.

 

ஏலத்தில் சிறந்த வீரர்கள் அணிக்குள் பெரிதாக வராத நிலையில், அவர்களுடைய ஐபிஎல் கோப்பை கனவு கைகூடவில்லை.

இந்த நிலையில், லக்னோ அணியின் மென்டர் பதவியில் இருந்து கம்பீர் விலகியதோடு, அரசியலில் இருந்தும் முழுதாக விலகி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மென்டராகி இருக்கிறார்.

ஐபிஎல்இல் டிஆர்எஸ் நீக்கம்.. ரிவ்யூ கேட்டால் நடப்பது இதுதான்... பிசிசிஐ அதிரடி.. 

மினி ஏலத்தில் மிட்சல் ஸ்டார்க்குக்கு 24.75 கோடி ரூபாய் கொடுத்து வாங்கினார்கள். கொல்கத்தா அணி தற்பொழுது வலிமையாக காணப்படுகிறது.

இந்த நிலையில் கொல்கத்தா அணி வீரர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும் விதத்திலும், தனக்கு மீண்டும் வாய்ப்பு அளித்த அணி உரிமையாளர் ஷாருக்கான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் கவுதம் கம்பீர் சில முக்கியமான விஷயங்களை சொல்லி இருக்கிறார்.

“நான் கேகேஆர் அணியை விட்டு விலகும் போது, இந்த அணி மிகவும் சிறப்பாக இருக்கும் என்கின்ற உறுதிமொழியை உங்களுக்கு கூறுகிறேன். நான் கொல்கத்தா அணியை வெற்றி பெற வைக்கவில்லை கொல்கத்தா அணிதான் என்னை வெற்றி பெற வைத்தது.

நான் கையாளுவதற்கு மிகவும் கடினமான நபர். இத்தனை வருடங்களாக என்னுடைய கோபத்தை தாங்கியதற்கு ஷாருக்கான் மற்றும் வெங்கி மைசூருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

நான் ஒரு வீரராக கொல்கத்தா அணிக்குள் வந்த பொழுது ஷாருக்கான் என்னிடம் ‘இது உங்கள் அணி நீங்கள் உருவாக்குங்கள் இல்லை உடையுங்கள்’ என்று சொன்னார். இப்போது நான் வந்திருக்கும் பொழுதும் அதையே தான் சொன்னார்” என்று கம்பீர் கூறியிருக்கிறார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...