56 வீரர்களை அதிரடியாக நீக்கும் பிசிசிஐ... அணிகளுக்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கல்!

ஐபிஎலில் விளையாடும் 56 இளம் இந்திய வீரர்களை நீக்கவுள்ளதாக பிசிசிஐ எடுத்துள்ள தீர்மானம், அணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

56 வீரர்களை அதிரடியாக நீக்கும் பிசிசிஐ... அணிகளுக்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கல்!

ஐபிஎலில் விளையாடும் 56 இளம் இந்திய வீரர்களை நீக்கவுள்ளதாக பிசிசிஐ எடுத்துள்ள தீர்மானம், அணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

இன்று ஆரம்பமாகும் ஐபிஎல் 17ஆவது சீசனில் மொத்தம், 165 இந்திய வீரர்கள் விளையாட உள்ள நிலையில், அவர்களில் 56 இந்திய வீரர்கள், 2024 ரஞ்சிக் கோப்பையில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், 25 வீரர்கள் ஒரேயொரு ரஞ்சிக் கோப்பை போட்டியில்தான் ஆடி உள்ளதால், ரஞ்சிக் கோப்பை தொடருக்கு பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் ரஞ்சிக் கோப்பை தொடரில் விளையாட மறுத்து, ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான பயிற்சியை மேற்கொண்டனர்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், பெரும்பாலான ஐபிஎல் வீரர்களும், ரஞ்சிக் கோப்பையை புறக்கணித்திருப்பது அதிர்ச்சிமேல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பிரச்சினையை ஜம்மு கஷ்மீர் கிரிக்கெட் வாரிய தலைவர் அனில் குப்தா, பிசிசிஐ கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். 

அதன்பிறகுதான், ஐபிஎல் 17ஆவது சீசனுக்கு தேர்வான இந்திய வீரர்கள் எத்தனை ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் விளையாடினார்கள் என்ற விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ரஞ்சிக் கோப்பையில் விளையாடாத 56 இளம் இந்திய வீரர்களை, 17ஆவது சீசன் முடிந்த உடன், ஐபிஎலில் பங்கேற்க தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இவர்கள் 15 ரஞ்சிக் கோப்பையில் விளையாடினால் மட்டுமே, மீண்டும் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...