பெரிய பிரச்சன அதாங்க... டோனியை சுட்டிக்காட்டி கம்பீரின் சர்ச்சை பேச்சு

2 months ago 167
செய்திக்கு கிரிக்கெட் செய்திக்கு செயலிக்கு

நடப்பு ஆண்டின் ஐபிஎல் சீசனின் இரண்டாவது பகுதி வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கிறது. அனைத்து அணிகளையும் போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கோப்பையைக் கைப்பற்ற கடும் முயற்சி மேற்கொள்ளும் என எதிர்பார்க்கலாம். 

அதே நேரத்தில் சி.எஸ்.கே.வுக்கு பிரச்சனைகள் இருப்பதாக சொல்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர்.

அவர், 'டோனி 4வது அல்லது 5வது இடத்தில் இறங்கும் பேட்ஸ்மேன். ஆனால் அவர் இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் 6வது அல்லது 7வது இடத்தில் இறங்குவதைப் பார்த்தோம். சில நேரங்களில் அவர் சாம் கரனைக் கூட தனக்கு முன்னால் அனுப்பி வைத்தார்.

அவர் சி.எஸ்.கே.வைப் பொறுத்தவரை ஒரு மென்டார் ஆகவும், ஒரு விக்கெட் கீப்பராகவும் மட்டுமே இருக்கப் பார்க்கிறார் என்பதால்தான் இப்படி செயல்படுகிறார்.

இனிமேல் பேட்டிங் என்பது டோனிக்கு மிகப்பெரும் பிரச்சனையாகத் தான் இருக்கப் போகிறது. காரணம், சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடாத போது, ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடுவது என்பது கடினமான காரியம்தான்.

சி.எஸ்.கே. அணிக்கு மிகப்பெரும் பிரச்சனை, இனி அவர்கள் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாட வேண்டும். ஏனென்றால் டோனியால் இனி பழைய மாதிரி விளையாட முடியாது' எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளைப் படிக்க
பேஸ்புக்கில் செய்திகளை உடனுக்குடன் படிக்க